Show all

பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பினை நடத்தப்போவதாக சீனா அறிவித்திருந்தது.

தலைநகர் பீஜிங்கில் தியனன்மென் சதுக்கத்தில், சீனா அந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பை இன்று நடத்தி காட்டியது. இந்த அணிவகுப்பில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ராணுவ அணிவகுப்பில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மேலும் 200 விமானங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள் அணிவகுத்து வந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.