Show all

இலங்கை நாடாளுமன்றம் திங்கட் கிழமை கூடுகிறது! ஐநா, மற்றும் உலக நாடுகள் நெருக்கடியால்

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமையன்று கூடுகிறது. உள்;நாட்டிலும் உலக அளவிலும், ஊழல் மற்றும் போர்க்குற்றவாளியான, ராஜபக்சேவை இலங்கையின் தலைமை அமைச்சராக அறிவித்து ஒட்டு மொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் மைத்ரிபால சிறிசேனா. இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்கள் இலங்கையில் நீடித்து வந்தன.

ரணில் விக்ரமசிங்கே பெரும்பான்மையை நடாளுமன்றத்தில் நிரூபித்து விடக்கூடாது என்பதற்காக நாடாளுமன்றம் முடக்கப்பட்டதாக அறிவித்தார் சிறிசேனா. இருபது நாட்களுக்குப் பின்னரே மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால்: ஐநாஅவை, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா ஆகியோர் தொடர்ந்து, சிறிசேனாவிடம் நாடாளுமன்றத்தைக் கூட்ட வலியுறுத்தி வந்தனர்.
இலங்கையில் அமெரிக்க, இலங்கைக்கான தனது தூதரகத்தை சிறிசேனாவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் முகமாக, மூடியே விட்டது. கரு ஜெயசூர்யா கடிதம் மூலமாகவும் நேரிலும் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயத்தினை சிறிசேனாவிற்கு நேற்று எடுத்துக் கூறினார்.

இந்நிலையில் நாடாளுமன்ற முடக்க உத்தரவினை தளர்த்தியுள்ளார் மைத்ரிபால சிறிசேனா. நாடாளுமன்ற முடக்க உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் திங்கட் கிழமையன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் மைத்ரிபால சிறிசேனா மற்றும் ராஜபக்சேவின் உறுப்பினர்கள் மொத்தம் 95 இடங்களை மட்டுமே பிடித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவின் தேசியக் கட்சி 106 இடங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

திங்கட் கிழமை கூடும் நாடாளுமன்றத்தில் வரவு-செலவு பதிகை செய்யப் படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. வரவு-செலவு பதிகை செய்யப் படும் முயற்சி முன்னெடுக்கும் திட்டமிருந்தால், நிச்சயமாக பாராளமன்றத் திறப்பு நேர்மறையானதாக இருக்க முடியாது. பெரும்பான்மை நிரூபிக்கும் முயற்சி என்றால். அப்படி இப்படி அடாவடிக்குப் பின், பாராளுமன்றத் திறப்பு நேர்மறையில் முடியலாம்.

சிறிசோனாவையும் ராஜபக்சேவையும் சேரவிட்டால், பௌத்த ஆர்வலரான சிறிசேனா, ராஜபக்சேவின் மூளைச்சலவையிலிருந்து தப்பிக்கவே முடியாது. ரணிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பெரும்பான்மையை நிரூபித்தாலும்- ராஜபக்சேவின், நோயாளராக இருக்கிற சிறிசேனாவை அதிபராக வைத்துக் கொண்டு இன்னும் ஓராண்டு இருக்கிற ஆட்சியை நடத்த படாதபாடு படவேண்டியிருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,958.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.