Show all

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார்.

ஜெர்மனியின் பான் நகர மேயராக இந்தியாவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் பதவியேற்றார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் மேயராவது இதுவே முதல்முறையாகும். ஜெர்மனியின் தலைநகராக இருந்த பான் நகர மேயருக்கான தேர்தல் நடந்தது.  இதில், ஆளும் கட்சியான கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன்(49) என்பவர் போட்டியிட்டார். மேயர் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெற்று, சமூக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை தோற்கடித்தார்.

பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ள நகரம் பான். ஐநா சபை சார்பில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் இங்கு அதிகளவில் உள்ளன.

கடந்த 21 ஆண்டுகளாக சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் இங்கு மேயராக இருந்துள்ளனர். இந்நிலையில், ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட அசோக் ஸ்ரீதரன் அமோக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேயருக்கான பதவியேற்பு விழா நடந்தது. முக்கிய பிரமுகர்கள், கவுன்சிலர்கள் முன்னிலையில் அசோக் தரன் மேயராக பதவியேற்றுக் கொண்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் ஜெர்மனியில் மேயராக பதவியேற்றுக் கொண்டது இதுவே முதல்முறை. 5 வருடம் மேயராக பதவி வகிக்க உள்ள அசோக், பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

பான் நகரின் வளர்ச்சிக்காக முதலீடுகளை ஈர்க்கவும், தனியார் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அசோக் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.