Show all

ஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம்.

முகநூலில், விருப்பமின்மை பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் அணி ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே,

விருப்பம் பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை

முகநூல் அறிமுகம் செய்துள்ளது.

முகநூலில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது.

பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு விருப்பம் இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து

இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர்.

அந்த வகையில், விருப்பம் பட்டனைப் போலவே விருப்பமின்மைக்கு ஈடான வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த மாதம் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்தார்.

இந்த நிலையில்,

முற்றிலும் விருப்பமின்மை என்பதாக அல்லாமல்,

மனிதர்களின் 6 விதமான உணர்வுகளைப் வெளிப்படுத்தும் விதத்தில் பயனாளிகளுக்காக, விருப்பம் பட்டனையொட்டிய 6 வகையான குறியீட்டு பொம்மைகளுடன் பாப்-அப் பட்டன்களை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி

அன்பு, ஹாஹா, யாஹ், வாவ், சோகம் மற்றும் கோபம் ஆகிய 6 வகையான பாப்-அப் பட்டன்களில் ஒன்றை பயனாளிகள் தங்களது விருப்பமுடன் க்ளிக் செய்து உணர்வுகளைப் பகிரலாம்.

எத்தனை விருப்பம்-கள் என்பதை எண்ணிக்கையிட்டு காட்டும் அதேமுறையில், குறிப்பிட்ட கருத்துக்கான விதவிதமான மனநிலையை வகைப்படுத்திய எண்ணிக்கையும் வெளிப்படும்.

முதற்கட்டமாக இன்று முதல் அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முகநூல் பயனாளிகள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

விருப்பம் பட்டனை க்ளிக் செய்ததும் அதனை வகைப்படுத்தும் 6 ஸ்மைலிகளைப் பயனாளிகளிகள் தேர்வு செய்து தங்களது மனநிலையைப் பகிரும் வகையில் இந்தப் புதிய முறை உள்ளது.

அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டு முகநூல் பயனாளிகளிடம் அவர்களது அனுபவத்தை கேட்டறிந்து, பின்னர் உலகம் முழுவதும்,

விருப்பம் உடன் சேர்ந்த இந்த 6 பாப்-அப் பட்டன்களையும் முறைப்படி அறிமுகம் செய்ய முகநூல்; திட்டமிட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.