Show all

அரசபயங்கரவாதத்தால் பழகிப் போன சிறிசேனா, ராஜபக்சே தங்கள் இனத்தினருக்கு எதிராகவே காட்டுமிராண்டித் தனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் 113 என்ற பெரும்பான்மையை பெற முடியாத நிலையில், எதிர் கட்சியாக செயல்பட முடிவு எடுக்க வேண்டும் என ராஜபக்சேயின் நெருங்கிய ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கமா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட முறை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், சர்வதேச அளவில் அவமானகரமானது எனவும் விமர்சித்துள்ளார்.  

நாடாளுமன்றத்திற்குள் பேரவைத் தலைவரை நுழைய விடாமல் ராஜபக்சே ஆதரவு நாளுமன்ற உறுப்பினர்கள் தடுத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குமார வெல்கமா, 25 ஆண்டு கால இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இப்படியொரு நிகழ்வை பார்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். 

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களின் தொடர் அரச பயங்கரவாதங்களை சிங்கள அறிவாளர்களே அருவருப்பாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் இலங்கையில் அரசபயங்கரவாதத்தால் பழகிப் போன சிறிசேனா, ராஜபக்சே தங்கள் இனத்தினருக்கு எதிராகவே காட்டுமிராண்டித் தனத்தை தொடங்கியிருக்கிறார்கள். இதற்கான நல்ல பலன், தமிழர்களுக்கும் நன்மையாக முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,974.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.