Show all

சிங்கப்பூரில் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் கலந்துக்கொண்டு வாழ்த்து

சிங்கப்பூரில் தமிழர்கள் கொண்டாடிய பாரம்பரிய பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமரான லீ ஹிசீன் லூங் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பொங்கல் திருவிழா தொடர்ந்து 4 நாட்கள் வெகுவிமரிசையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் பொங்கல்

திருவிழாவைக் கோலாகலமாக தொடங்கியுள்ளனர். சிங்கப்பூரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆங் மோ கியு என்ற நகரில் தமிழர்கள் இன்று பொங்கல் திருவிழாவை ஒரு பெரும் பொது விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆங் மோ கியு நகர பாராளுமன்ற உறுப்பினருடன் சிங்கப்பூர் பிரதமருமான லீ ஹிசீன் லூங் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த பிரதமருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். சுமார் 3,000 தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பெண்கள்சமைத்திருந்த சர்க்கரை பொங்கலை பிரதமர் ஆர்வமுடன் ருசித்து அவர்களுடன் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ‘பொங்கல் திருவிழாவின் மூலம் சமுதாயத்தில் ஒற்றுமையையும், இனப்பாடுபாடு இல்லாத நல்லிணக்கனமும் பெருகவேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.