Show all

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் இன்று பதவி விலகினார்.

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் இன்று பதவி விலகினார்.

2012-ம் ஆண்டு முதல் கவுதமாலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஓட்டோ பெரேஸ் மோலினா (வயது 64) மீது சுங்க மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு விலக்கு உரிமையை அந்த நாட்டு பாராளுமன்றம் ரத்து செய்தது. இதனால், அவர் மீது ஊழல் வழக்குகள் தொடர்ந்து விசாரணை நடத்த வழி பிறந்தது.

இதையடுத்து நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிபரை கைது செய்வதற்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, அதிபர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என்றே அவரது வழக்கறிஞர்கள் கூறினர். ஆனால், இரவோடு இரவாக தனது மனநிலையை மாற்றிக்கொண்ட அதிபர், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை பாராளுமன்றத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். அதில், தனக்கு எதிரான வழக்கை எதிர்கொள்வதற்கு வசதியாக பதவி விலகி இருப்பதாக கூறியுள்ளார்.

அதிபர் ஓட்டோ பதவி விலகியதால் அவரது பதவிக்காலம் முடியும் வரையில், அதாவது ஜனவரி மாதம் வரை, துணை அதிபராக இருக்கும் அலெஜான்ட்ரோ அதிபர் பொறுப்பை கவனிப்பார்.

கவுதமாலாவில் அதிபர், துணை அதிபர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பொதுத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.