Show all

ஒரு அழைப்பிதழுக்கு செலவு என்ன தெரியுமா! தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகளின் திருமண அழைப்பிதழ் தங்கத்தால் அலங்கரிப்பு

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் கேதார்நாத் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். 

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இசா அம்பானி பிராமல் குழுமத்தின் தலைவர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த பிராமல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணஉறுதியேற்பு நடைபெற்றது. 

இந்நிலையில், இதற்கான திருமண அழைப்பிதழை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். குடும்பத்தினருடன் சென்ற அவர் சுமார் 20 நிமிடங்கள் அங்கு பூசைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

இசா, ஆனந்த பிராமல் திருமண அழைப்பிதழின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தங்கத்திலேயே அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண அழைப்பிதழ் ஒன்றின் செலவு மட்டுமே 1 லட்சத்திற்கும் மேல் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,965. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.