Show all

ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு பதிலாக, ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக ஜிகாத்திற்கு(புனிதப்போர்) ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரியாவில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் நுஸ்ரா முன்னணி அமைப்பு மற்றும் ஐ.எஸ் உள்ளிட்ட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்யா வான்வழி தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்த நுஸ்ரா முண்ணனி அமைப்பின் தலைவர் அபு முகம்மது அல் ஜோலானி, காகஸஸ் பகுதி தீவிரவாதிகள், ரஷ்ய வான்வழி தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் ‘ரஷ்யர்களைக் கொல்லுங்கள்’ என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், ரஷ்யா அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த முன்வர வேண்டும் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  

இது குறித்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் அபு முகம்மது அல் அத்னானி வெளியிட்டுள்ள ஒரு ஆடியோ பதிவில்,

‘உலகில் உள்ள முஸ்லீம் இளைஞர்களே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான புனிதப்போர் தொடுக்க முன்வாருங்கள்.

முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிரான போர் இதுவாகும்.

ஏனெனில் இது இறைநம்பிக்கை உடையவர்களுக்கும் நாத்திகர்களுக்கும் இடையேயான போர்’

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.