Show all

இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில்  இந்தியா, அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - இந்தியா வர்த்தக கவுன்சிலின் (யு.எஸ்.ஐ.பி.சி.) 40வது ஆண்டுக் கூட்டம் வாஷிங்டனில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமெரிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், கலந்து கொண்ட பின்னர் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறும் போது ஆசிய பசிபிக் நாடுகளுக்கானப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவையும் உறுப்பினராக இடம்பெறச் செய்ய அமெரிக்காவின் ஆதரவை கோரியுள்ளதாக, தெரிவித்தார்.

மேலும் அவர் அமெரிக்கா இந்தியா இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பயங்கரவாதத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் கூடுதல் முனைப்புடன் செயல்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், பெரும் சவாலாக விளங்கும் பருவநிலை மாற்றத்துக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளிலும், ராணுவத் தளவாடங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.