Show all

ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அமெரிக்காவின் 40வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட் ரீகன் பதவி வகித்தபோது அமெரிக்காவின் மதிப்புக்குரிய முதல் பெண்மணியாக வலம்வந்த நான்சி மாரடைப்பால் உயிரிழந்தார். நான்சியின் மறைவுக்கு அமெரிக்காவின் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்சேல் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்து அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

     அமெரிக்க மக்களின் மரியாதைக்குரிய நாட்டின் முதல் பெண்மணியாக நான்சி ரீகன் வௌ;ளை மாளிகையில் வாழ்ந்தபோதும், முன்னாள் அதிபர் ரீகனுடன் வௌ;ளை மாளிகையில் இருந்து அவர் பிரியாவிடை பெற்றபோதும் எங்களுக்கெல்லாம் பெருமைக்குரிய மிகப்பெரிய முன்னுதாரணமாக நான்சி இருந்தார். நாட்டின் முதல் பெண்மணி என்ற தகுதியை அவர் நிலைநாட்டிச் சென்றார். அல்சைமர் நோய்க்கு எதிராக அவர் ஆற்றிவந்த பிரசாரமும், போராட்டமும் பல்வேறு நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும், பலரது உயிர்களைப் பாதுகாப்பதிலும் உறுதுணையாக இருந்துள்ளது. மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக நம்மை எல்லாம் பிரிந்துச் சென்ற நான்சி ரீகனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

என தங்களது இரங்கல் செய்தியில் ஒபாமா தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.