Show all

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பிரணாப் முகர்ஜி உரையாடினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று பள்ளி மாணவ மாணவிகளுடம் உரையாடினார்.டெல்லியில்  டாக்டர் ராஜேந்திர பிரசாத் வித்யாலயா பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். அப்போது தனது பழைய கால நினைவலைகளை மாணவ மாணவிகளுடம் பகிர்ந்து கொண்டார்.

எனது தாயார் எனக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியவர். கடினமாக உழைக்க வேண்டும் என்று வழி காட்டியவர் அவர் தான்.

அந்த காலத்தில் மின்சார வசதி கிடையாது அதனால் மண்ணெய் விளக்கை கொண்டு நாங்கள் படித்தோம். நான் பள்ளிக்கு தினமும் 5.கி.மீ தூரம் வரை நடந்து சென்று படித்தேன்.

நமது அரசியலைமைப்பு மிகவும் சிறந்தது. மக்களுக்கான சட்டத்தை நிறைவேற்ற மக்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. நமது நாட்டின் பொருளாதரம் குறித்து பலரும்  குறை கூறுகின்றனர். நமது பொருளாதர கொள்கைகள் குறைபாடுகள் குறித்து பார்க்கத் தவறி பொருளாதாரம் இன்னும் வளரவில்லையே என்று கூறி வருகின்றனர்.

நமது நாடு சுதந்திரத்திற்கு பிறகு சாலை வசதிகள், மின்சாரம் வசதிகள், ஆகியவற்றை பெற்றுள்ளோம். பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் அளவிற்கு சாலைகள் நன்றாக கிடைத்துள்ளது.

நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தேன். எனக்கு சிறந்த ஆசிரியர் என்றால் அது என் அம்மா தான். என்னை குடியரசு தலைவராக அழைக்க வேண்டாம் பிரணாப் முகர்ஜி சார் என்றே அழைக்கலாம் நான் இந்த மிகப்பெரிய பொறுப்பில் இருக்க முக்கிய காரணம் எனது அம்மாவும், ஆசிரியரும் தான் காரணம் இவ்வாறு மாணவ மாணவிகளிடம் பிரணாப் முகர்ஜி உரையாடினார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.