Show all

இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான்...

பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் செரீப் எச்சரித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், எதிர்காலத்தில் குறுகிய கால போர்கள் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும், என்று கூறினார்.

இந்த நிலையில், தல்பீர் சிங்கின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் செரீப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, ராவல் பிண்டியில் நடைபெற்ற, இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த 50 வது ஆண்டு விழாவில் ரஹீல் செரீப் பேசியதாவது:

நமது ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. எதிரிகள் நம் மீது குறுகிய எண்ணத்துடன் குறைத்து மதிப்பிட்டு, தாக்குதல் நடத்த எண்ணியிருந்தால் இதனை நாங்கள் எதிர் கொள்ள தயார் . எதையும் சந்திக்கக் கூடிய நிலையில் , நமது படையினருக்கு முழு தகுதி உண்டு. எந்த சூழலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நம் மீது யாராவது போர் தொடுக்க முற்பட்டால், எதிரிகள், தாங்க முடியாத விளைவுகைள சந்திக்க நேரிடும் என கூறினார்.

மேலும் ஆப்கானிஸ்தானுடன் சமாதானப்போக்கை கடைபிடிக்க முயல்கின்றோம் ஆனால் சில விரோத சக்திகள் அதை சீர்குலைக்க முயல்கின்றன. பயங்கரவாதிகள் மீது நாம் அனுதாபம் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், நிதியளிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் குற்றவாளிகளே. ஒருமுகபடுத்தப்பட்ட பாகிஸ்தானை உருவாக்க வேண்டும். ஆப்கானிஸ்தானுடன் அமைதி பேச்சு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.