Show all

இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உறுதிப் படுத்தும் ரணில் விக்கிரம சிங்கே, ராஜபக்சே

07,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எல்லையில்லாத போர்க்குற்றங்கள் மூலம், விடுதலை புலிகளுக்கும் இலங்கையில் ராஜபக்;;சே ஆட்சி காலத்து இராணுவத்திற்கும் இடையிலான போர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. 

பத்து ஆண்டுகளாக விடுதலை புலிகளிடம் இருந்து கைப்பற்றிய தமிழர் பகுதிகளில் இன்னும் எந்த நிவாரணமும் தமிழர்களுக்கு வழங்கப் படவில்லை. ஏன்? இராணுவம் கூட இன்னும் திருப்பி அழைத்துக் கொள்ளப் படவில்லை. தமிழர் ஆதரவால் ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட ரணில் விக்கரம சிங்கே தமிழர்களுக்கு ஏதாவது செய்ய விரும்புவதாகத் தெரிகிறது. அதன் பொருட்டு, தமிழர்கள் போர்க்குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த வகையில் இலங்கையில் முந்தைய அரசின் போர்க்குற்றத்தை வாக்குமூலம் அளித்து ஒப்புக் கொண்டுள்ளார் ரணில் விக்கிரம சிங்கே.

இதன் எதிர்வகையாக வாக்குமூலம் அளித்து தனது ஆட்சிகாலத்து போர்க்குற்றத்தை பிரகடனப் படுத்துகிறார் ராஜபக்சே. 'ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்' என்கிறார் ராஜபக்சே. ஆம் போர்க்குற்றம் நடத்தப் பட்டது. அதை ரணில் விக்கிரம சிங்கே ஒப்புக் கொண்டது தவறு என்று குற்றஞ் சாட்டுகிறார். 

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

வடக்கில் சென்று தமிழ் மக்கள் நடுவே போர்க்குற்றம் இடம்பெற்றதாக தலைமை அமைச்சர் ரணில் கூறியமை எமது நாட்டை சர்வதேச சமூகத்திடம் கட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது ஆகும்.

அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரவேற்றுள்ளதுடன் நாட்டின் தலைமை அமைச்சரே போர் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதால் ஜெனிவாவில் எமக்கு சாதகமாக செயல்பட முடியும் என்று கூறியுள்ளார். ஆகவே இவர்களின் நோக்கம் என்ன என்பது இன்று தௌ;ளத் தெளிவாக விளங்குகின்றது என்கிறார் ராஜபக்சே.

ஆம்! ராஜபக்சேவைத் தனிமைப் படுத்தி, உலக அரங்கில் போர்குற்றவாளியாக அறிவித்து, தமிழர்களோடு பகைமை பாராட்டாத சிங்கள பொது மக்கள் மீது, புத்தபிச்சுகளாலும், ராஜபக்சேவாலும் ஏற்றப்பட்ட பேரினவாத அவப்பெயரை களைய, தமிழர்களிடமும், உலக சமூகத்திடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோருவது ஒன்றே வழி என்பதுதான் ரணில்விக்கிரம சிங்கேவின் நோக்கம். சரிதானே ;நல்லதுதானே. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,068.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.