Show all

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேல் நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை! தலைவர்

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார். 

ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு நடுவண் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த நிலையில் காவிரி ஆணையத்தின் கூட்டம் இன்று கூடியது. இதில் அணை விவகாரத்தை தமிழக அரசு எழுப்பியது. 

ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கூறுகையில் இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. சில விசயங்களில் முடிவு எடுத்துள்ளோம். காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம். இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது. காவிரி படுகை பகுதிகள் நல்ல மழையை பெற்றிருக்கின்றன. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், அடுத்த மாதம் நடைபெறும். ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. அவற்றை கவனத்தில் கொள்வோம். ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவைப்படுகிறது என்றார் அவர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.