Show all

ராஜபக்சேவின் முதல் அறிவிப்பு! ரணிலிடம் உள்ள பாராளுமன்றத்தையும் தமிழ்க் கட்சிகள் வசம் உள்ள மாகாண அவையையும் மீட்க தேர்தல்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அடாவடி தலைமை அமைச்சர் ராஜபக்சே, தனது முதல் அறிவிப்பாக பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் என்பதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண அவைத் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். இந்த இரண்டு தேர்தல்களும் தனக்கு சாதகமான முடிவுகளை வழங்கும் என்று ராஜபக்சே கருதுவதே இலங்கையின் இத்தனை அடாவடிகளுக்கும் சட்ட மீறல்களுக்குமான அடிப்படை. 

சில மாதங்களுக்கு முன் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ராஜபக்சேவின் கட்சி 45 விழுக்காடு வாக்குகள் பெற்றதே, எப்படியாவது ஆட்சியைக் கலைத்து விட்டால் தனப்பெரும்பான்மை ஆட்சி அமைத்து விடலாம் எனும்  நம்பிக்கையே ராஜபக்சேவின் இத்தனை துணிச்சலுக்குமான காரணம். 

ஒருவேளை தேர்தல் வந்தாலும், ராஜபக்சே தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை. ஆனாலும் சிரிசேனாவையும் மூளைச் சலவை செய்திருப்பதுதான் சிக்கலாகிப் போய் விட்டது.
இந்த முறை சிங்கள கட்சிகளே தமிழர்களுக்கு உரிய உரிமைகளைத் தரத்தான் வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன. அதனால் இந்த முறை தேர்தல் வந்தாலும் ராஜபக்சேவின் பழைய மாதிரியான ஆட்சிக்கான கனவெல்லாம் பலிக்காது. 

நான்காவது தமிழ்ஈழப் போரில், விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு ஆதரவளித்த சில ஐரோப்பிய நாடுகளே இலங்கை மீது நம்பிக்கை இழந்து, பொருளாதாரத் தடை விதித்திருக்கின்றன. அதுவே இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணம். உள்ளாட்சித் தேர்தலில் உணர்ச்சி வயப்பட்டு ராஜபக்சே ஆதரித்த சிங்களவர்கள் இந்நேரம் ராஜபக்சேவின் உண்மை முகத்தை உறுதியாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். 

சீனா மற்றும் இந்தியாவைத் தவிர, இலங்கையின் மற்ற நட்பு நாடுகள் அனைத்தும், இலங்கையில் சிங்கள பேரினவாதத்தை விரும்ப வில்லை. ராஜபக்சே பாராளுமன்றத்திற்கு தேர்தலைக் கொண்டு வந்தால், தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு அந்த நாடுகளின் தலையீடு இருக்கும். 

ராஜபக்சே பகல் கனவு காண்பது போல் தற்பொழுது தமிழர் வசம் இருக்கும் மாகாண அவை கைநழுவிப் போகாது. மாறக முழுமையாக தமிழர் வசம் ஆவதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும். தமிழ் அரசியல் கட்சிகள், முன்பு போல் பகுதி அச்சத்தோடு இல்லாமல் முழு வீரியத்தோடு உள்ளார்கள். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,955.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.