Show all

இது கமுக்கத் தகவலாகப் பாதுகாக்கப் படுகிறதாம்! இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தம்பி கோத்தபய போட்டி

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பதவி காலம்  24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121 புதன் கிழமை அன்றுடன்  (08.01.2020) முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

அதற்கான வேட்பாளர் தேர்தலில் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரம்காட்ட தொடங்கிவிட்டனர். இலங்கையில் ஒருவர் 3வது முறையாக அதிபர் பதவி வகிக்க முடியாது. 

அதன்படி முன்னாள் அதிபர் ராஜபக்சே வர இருக்கின்ற தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கனவே அவர் 2 தடவை அதிபராக பதவி வகித்துள்ளார். 

தற்போது அவர் இலங்கை பொது ஜன பெரமுன என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அக்கட்சியின் சார்பில் தனது தம்பி கோத்த பய ராஜபக்சேவை அகவை 69 அதிபர் தேர்தலில் நிறுத்த முடிவு செய்துள்ளார்.

இவர் ராஜபக்சே அரசில் ராணுவ அமைச்சராக இருந்தார். பல்வேறு உலக நாடுகள் வேதியியல் ஆயுதங்கள் மற்றும் படையுதவியுடன் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடத்தி உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.

இவரை அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்துவது குறித்த முடிவு கடந்த கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ராஜபக்சேவின் குடும்பத்தினர் விருந்து நிகழ்ச்சி நடத்தினர். கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து இருந்தாலும் அதை தற்போது பகிரங்கமாக அறிவிக்கவில்லை.

தேர்தல் வரை அதை கமுக்கமாக பாதுகாக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அதேநேரம் தேர்தலில் போட்டியிட கோத்தபய தயாராகி வருகிறார். இலங்கை அரசியல் சட்டப்படி இரட்டை குடியுரிமை உள்ளவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.

எனவே தனக்கு உள்ள அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும்படி கோத்தபய விண்ணப்பித்துள்ளார். தேர்தலில் தற்போதைய அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டணியில் போட்டியிட கோத்தபய திட்டமிட்டுள்ளார்.

நாளது 30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5116 புதன் கிழமையன்று (14.01.2015) ராஜபக்சே, இலங்கை சட்டத்தை எல்லாம் திருத்தி மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போன நிலையில் 'என் அரசியல் வாழ்வையே அழித்து விட்டாய்: கோத்தபயயிடம் சீறிய ராஜபக்சே' என்ற தலைப்பில் உலகம் முழுவதும் தீயான செய்தியும் தற்போது காணத்தக்கது.

  'என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய்' என தனது சகோதரர் கோத்தபயயிடம், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சீறியுள்ள சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்து விரட்டப்பட்டுள்ள ராஜபக்சே கடும் விரக்தியில் உள்ளார். தோல்விக்குப் பிறகு தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்காக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளால் ராஜபக்சே நிலை குலைந்து போய் உள்ளார். குறிப்பாக விடுதலைப்புலிகளின் பல டன் தங்கத்தை அவர் அபகரித்து கொண்டதாக எழுந்துள்ள புகார் ராஜபக்சேயை கண்ணீர் விட வைத்துள்ளது.

இந்த நிலையில் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயயை பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கோத்தபய, 'என்னை வீட்டு காவலில் வைத்துள்ளனர். என்னால் வெளியில் தலை காட்ட முடியவில்லை' என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து ராஜபக்சேக்கும், கோத்தபயவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோத்தபயவிடம் கடும் கோபத்தில் எரிந்து விழுந்துள்ள ராஜபக்சே, 'என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீ தான்டா என் அரசியல் வாழ்வை அழித்து விட்டாய்' என்று கோபத்தில் கத்தியுள்ளார்.

ராஜபக்சேவை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் சமரசம் செய்துள்ளார். அப்போது, அவரிடம் ராஜபக்சே, 'என்னுடைய 45 ஆண்டு அரசியல் வாழ்க்கை என் சகோதரர்களாலும், என் மூன்று மகன்களின் நடத்தையாலும் அழிந்து விட்டது. எனக்கு வாய்த்த மகன்கள் இப்படி இருக்கிறார்கள். நான் என்ன செய்வேன்?' என்று புலம்பியுள்ளார்.

மகன்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளால் அவர் மனம் உடைந்து போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டிருப்பது அவருக்கு மேலும் ஒரு பலத்த அடியை கொடுத்துள்ளது.

ஆனால் தற்போது எல்லாம் சீரடைந்து விட்;டது ஏனென்றால் ராஜபக்சே சிங்களன்.

வெண்ணெய் திரண்டு வரும் போது பானை உடைந்தது போல, ஈழத்தமிழர்களின் தமிழீழக் கனவோ சிதைந்தே போனது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,096.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.