Show all

அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் இந்திய மதிப்பில் இது ரூ.2 கோடியே 90 லட்சம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 4 லட்சம் டாலர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஆகியோரின் மொத்த வருமானம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.2 கோடியே 90 லட்சம் ஆகும். இந்த வருமானத்தில் 5-ல் ஒரு பகுதியை அவர்கள் வரியாக செலுத்தியுள்ளனர். 1.5 சதவிதம் அளவிற்கு 34 தொண்டு நிறுவனங்களுக்கு அதிபர் தம்பதி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.