Show all

காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர்.

அமெரிக்காவில் வடக்கு டெக்சாசில் அஹமது முகமத்(14) மாணவ சிறுவன் அங்குள்ள டாலஸ் பகுதி பள்ளியில் படித்து வருகிறான். பள்ளியில் நடைபெற்ற பொறியியல் திட்டத்தின் ஒரு பகுதியில். தான் சுயமாக தயாரித்த டிஜிட்டல் கடிகாரத்தை பார்வைக்காக எடுத்து சென்றுள்ளார். இதைபார்த்த பள்ளி ஆசிரியை வெடிகுண்டு போன்று இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்தார். உடனடியாக பள்ளி நிர்வாகம் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தது. காவல்துறையினர் பள்ளி சிறுவனை கைது செய்தனர். பின்னர் விசாரித்து சிறுவன் கடிகாரம் தான் தயாரித்துள்ளார் என்பதை அறிந்ததும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விடுவித்து விட்டனர்.

இது குறித்து சிறுவன் அளித்த பேட்டியில் ஒரு போலீஸ் அதிகாரியும், பள்ளியின் முதல்வரும், என்னை 5 போலீஸ் அதிகாரிகள் உள்ள ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள், மேலும்,  நீ குண்டு தயாரிப்பதற்காக இதை செய்தாயா, என்று திரும்ப திரும்ப கேட்டார்கள் ஆனால், நான் திட்டமாக அதை மறுத்ததுடன், கடிகாரம் செய்வது தான் என்னுடய நோக்கம் என்று கூறினேன். பின்னர் சிறைக்கழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டேன் என்றார்.

உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மாணவ சிறுவன் அஹமது கைதானதை கண்டித்து கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில்

அமெரிக்க அதிபர் ஒபாமா தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வௌ;ளை மாளிகைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பேஸ்புக் நிறுவனர் உள்ளிட்ட சர்வதேச அளவில் முன்னணி நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மாணவ சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கர்கள் அந்த சிறுவனுக்காக ஹேஷ் டேக் உருவாக்கி ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.