Show all

ஐந்து அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். பராக்ஒபாமா

உலகச் சிறைக் கைதிகளில் 25விழுக்காட்டு பேர் அமெரிக்கர்களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே. ஆனால் உலக சிறைக் கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது.

சுமார் 22 லட்சம் அமெரிக்கர்கள் சிறையில் உள்ளனர். சுமார் 7 கோடி பேர் குற்றப் பின்னணி கொண்ட வர்களாக உள்ளனர். அதாவது 5 அமெரிக்கர்களில் ஒருவர் குற்றப் பின்னணி உடையவர். இந்தப் புள்ளிவிவரம் கவலையளிக்கிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண சிறைத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி சிறையில் கைதிகளுக்கு நல்லொழுக்கம், நன்னடத்தை நெறிகள் கற்றுத் தரப்படும்.

சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த மனநிலை மாற வேண்டும்.

மனிதர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு செய்திருப்பார்கள். எனவே சிறையில் இருந்து திருந்தி வெளியே வருபவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.