Show all

இணையத்தில் விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் பில்கேட்ஸ்- டிரம்ப் ஒப்பீடு! மோடியும் கூட இந்த ஒப்பீட்டில் இணைக்கத் தக்கவர்தானே

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஒரு உணவகத்திற்கு அண்மையில் வந்த பில்கேட்ஸ் ஒரு உணவுப் பொருளுக்கான கட்டணம் செலுத்திய பின்னர் கடைக்கு வெளியே அரையாடை பைக்குள் கை விட்டுக் கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தார். 

சாமானிய மனிதர் போல காத்திருப்பதைப் பார்த்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மைக் காலோஸ் என்பவர் அவரைப் புகைப்படம் எடுத்தார். பின்னர், பணக்காரர்கள் பில்கேட்ஸ் போன்று நடந்து கொள்ள வேண்டுமே தவிர வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு தங்கக்கழிவறையுடன் காட்சி கொடுக்கக் கூடாது என்று டொனால்ட் டிரம்பை கிண்டல் செய்து இந்தப் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் பகிர்வுகளோடு விருப்பங்களையும், வாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

நம்முடைய இந்தியத் தலைமை அமைச்சர் கூட டிரம்ப்பைப் போன்றவர்தானே! இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றிருந்த போது ஜெருசலேமில் உள்ள தி கிங் டேவிட் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இது உலகளவில் பாதுகாப்பான தங்கும் விடுதியாகும். அதே நேரம் பாதுகாப்பிற்கு ஏற்றக் கட்டணமும் வசூலிக்கப்படும். ஜெருசலேம் நகரத்தின் முதன்மைச் சாலையில் சிறிது உட்புறமாக இருக்கும் இந்த விடுதிக்குச் செல்லும் வழியில் செல்ல பல கட்டுப்பாடுகள் உண்டு.   

அமெரிக்க அதிபர் டிரம்ப் மூன்று கிழமைக்கு முன்பு ஜெருசலேம் சென்ற போது இங்கு தான் தங்கியுள்ளார். அவர் தங்கிய அதே அறை நம்ம மோடி அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் தி கிங் டேவிட் விடுதிக்கு வருவதற்கு முன்பு அங்கு உள்ள 110 அறைகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பின்னர் முழுமையாகப் பாதுகாப்புச் சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு தங்கவைக்கப்பட்டு இருக்கிறார் மோடி. 

தி கிங் டேவிட் விடுதியின் வெளிப்புறம் சிமெண்ட் காங்ரீட் மற்றும் ஸ்டீல் கட்டுமானத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாளரங்கள் அனைத்தின் கண்ணாடிகளும் குண்டுகள் துளைக்காத படி பாதுகாப்பு மற்றும் ராக்கெட் உள்நுழையாத பாதுகாப்பு வசதியுடன் உள்ளது

இங்குப் பணிபுரியும் ஊழியர்கள் இஸ்ரேலின் ஷின் பேட் பாதுகாப்பு சேவை மூலம் கவனித்து வருகின்றனர். தி கிங் டேவிட்டில் மொத்த விடுதியும் பதிவு செய்ய வேண்டும் என்றால் 165,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு இரவுக்கு 1.07 கோடி ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.