Show all

ஆர்வமுடன் ஐயப்பனை வழிபடத் துணிந்திருக்கும் அஞ்சலி! இன்று சபரிமலை நடைத்திறப்பு; தடை செய்யக் கூடாது ஹிந்துத்துவா அமைப்புகள்

20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் அமைந்த  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இரு பெண்கள் கோயில் கருவறை வரையில் சென்ற போது தந்திரிகளும், ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினர். அப்போது தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, பெண்கள் நுழையும் நிலை ஏற்பட்டால் கோவில் நடையை சாத்துவேன் என்றார். கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில், சித்திரை திருநாள் அவிட்டம் பேரரசர் பிறந்த நாளை முன்னிட்டு சபரிமலையில் நேற்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்பட்டது. இன்று செவ்வாய்கிழமை இரவு 10.30 மணிக்கு மூடப்படும்.

சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் அறங்கூற்றுமன்றம் சபரிமலை கோயிலைப் பூட்டக் கூடாது. கோயில் செயல்பாடுகளில் அரசு தலையிடக் கூடாது. பக்தர்கள் மற்றும் இதழியலாளர்களுக்கு அனுமதி மறுக்கக் கூடாது. வாகனங்களை சேதப்படுத்திய காவல்துறையினர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் கோயிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதித்தால் உடனடியாக கோயில் நடை சாத்தப்படும் என தலைமை நம்பூதிரி மிரட்டல் விடுத்துள்ளார். நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 2000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளா ஆலப்புழா மாவட்டம் செர்தலாவை சேர்ந்த அஞ்சலி அகவை 26 உள்ள பெண் சபரிமலை வந்துள்ளார். கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு பம்பா காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டுள்ளார்.

அனைத்து பக்தர்களும் வணங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்தப் பகுதியில் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன, பல்வேறு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று காவல்துறைதலைவர் அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.

ஆரியர்களின் கட்டுக்கதைகளைத் தள்ளி விட்டுப் பார்த்தால் ஐயப்பனும் ஒரு தாயின் பிள்ளைதான். வளர்ப்புத்; தாயுக்காக புலிப்பால் கொணர்ந்தார் என்பது சரி; ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தார் ஐயப்பன் என்பது எப்படி சரியாகும். ஆரியர்களின் கட்டுக்கதைகளைப் போற்றிக் கொள்ளவே ஹிந்துத்துவா அமைப்புகள். ஹிந்துத்துவா அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்ய, அரியர் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவதே சிறந்த வழி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,963.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.