Show all

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக போராட்டம். மாயாவதி:

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற கன்ஷிராமின் 9-வது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி கலந்துகொண்டு,

பாஜக தலைமையிலான நடுவண் அரசு, தேசிய ஊரக சுகாதார திட்ட ஊழலில் என்னைத் தவறாக தொடர்பு படுத்தி எனது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

2017 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காக, எனக்கும், எனது குடும்பத்துக்கு எதிராகவும்

சிபிஐ-யை தவறாக பயன்படுத்துகின்றனர்.

தலித்துகளையும், பழங்குடியினரையும் பாதுகாப்பதற்காக ஒரு மதசார்பற்ற அரசியலமைப்பை டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்தினார்.

ஆனால் இந்தியாவை இந்து நாடாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவும் இணைந்து சதி செய்கின்றது என்று பேசினார்.

இந்த செயலுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், இந்துமத கொள்கைப்படி உயர் சாதியினருக்கு, கீழ் சாதியினர் அடிமையாக இருக்க வேண்டும்.

எனவே தலித்துகளும், பழங்குடியினரும் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆனால் பாஜகவின் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி அனுமதிக்காது.

பாஜகவின் இந்த இட ஒதுக்கீட்டுக்கான போக்கை கண்டித்து தேசிய அளவில் போராட்டங்களை நடத்துவோம். முசாபர்நகர் கலவரம், தாத்ரி சம்பவம் போன்றவற்றுக்கு காரணமானவர்கள் யார்? என்பது தெரிந்த பிறகும், அவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காட்டு ராஜ்ஜியம் தான் நடக்கிறது. இந்த நிலை முடிவுக்கு கொண்டு வர பகுஜன் சமாஜ் கட்சியால் மட்டுமே முடியும் என்று மாயாவதி கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.