Show all

இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு வறுமையை எதிர்த்து போராட வேண்டும் என பிரதமர்...

உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாதா கிராமத்தில் 50வயது முஸ்லீம் முகமது அக்லக் பசு மாட்டு இறைச்சியை அடித்து சாப்பிட்டார் என்று 200பேர் கொண்ட கும்பல் அவரை அடித்து கொன்றது.  கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதியன்று நடந்த இந்தக் கொடூர தாக்குதல் உத்தரப்பிரதேச மாநிலத்தை மட்டுமல்லாமல் இந்தியாவையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

பிஷாதா கிராமத்தில்  இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரு வரை ஒருவர் எதிர்த்து போராடுவதை விட வறுமையை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்தார்.

பிஷாதா கிராமத் தலைவர் சஞ்சீவ் ரானா பிரதமர் மோடியின் கருத்து பற்றி கூறுகையில், இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு வறுமையை எதிர்த்து போராட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

அவர் கூறிய கருத்து முற்றிலும் சரியானது. அவரது கருத்து குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். பிஷாதா கிராமத்தில் தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

அங்கு பிரச்சினை ஏதும் இல்லை.

இந்துக்களும் முஸ்லீம்களும் அமைதி கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். கிராமத்தில் ஒற்றுமையை நிலை நாட்ட அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.

பிஷாதா கிராமத்தில் முஸ்லீம் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி படுத்தும் வகையில் அமைதி கூட்டங்கள் நடைபெறுகின்றன.

முஸ்லீம் மக்கள் பயப்படத்தேவையில்லை என்று உறுதியளித்து இருக்கிறோம். அக்லக்கிற்கு நடந்த சம்பவம் போல மீண்டும் ஒரு நிகழ்வு பிஷாதா கிராமத்தில் நடக்காது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.