Show all

அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தவேண்டும்.

பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை வளர்த்து விடுவதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுகிறது. பாகிஸ்தான் வளர்த்துவிட்ட தலீபான்கள் அந்நாட்டிலேயே தாக்குதல் நடத்தி நிலைகுலைய செய்கின்றனர்.

ஆனால் அபாண்டமாக அதை இந்தியாவின் செயல்பாடு என்று குற்றம் சாட்டுகிறது பாகிஸ்தான்.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திவருகிறோம் என்று கூறும் பாகிஸ்தான் சரியான நடவடிக்கைகளை எடுக்கிறதா என்றால் கேள்விக்குறியே.

தாக்குதல் நடத்துகிறோம் என்று பாகிஸ்தான் ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. இதற்கு அமெரிக்காவும் உதவி செய்கிறது. பாகிஸ்தானுக்குத் தேவையான நிதிஉதவி மற்றும் ஆயுத உதவிகளை செய்துவருவது அமெரிக்கா ஆகும். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் மற்றும் கெட்ட தீவிரவாதம் என பாகிஸ்தான் பிரித்து பார்க்கிறது.

இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்வதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டு உள்ளது. உலகநாடுகளின் நெருக்கடியை அடுத்தே பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திவருகிறது. தீவிரவாதத்தை அழிக்கவே என்று ஆயுதங்களை வாங்கி குவிக்கும் பாகிஸ்தான் அதனை இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்தத் துணியும் என்று பல்வேறு தரப்பில் எச்சரிக்கப்பட்டாலும், அமெரிக்காவும் தொடர்ந்து உதவிசெய்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு பேதம் காட்டாமல் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பாரக் ஒபாமாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து வௌ;ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்,

தீவிரவாத குழுக்கள் மத்தியில் வேற்றுமை பாராமல், பாகிஸ்தான் அரசின் செயல்பாடுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தான் அரசு பேதம் காட்டாமல் அனைத்து தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.