Show all

தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்: அமெரிக்கா

பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

 

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா நிதிஉதவி செய்து வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் ரூ.86,462 கோடியை தீவிரவாதத்தை தடுப்பதாக கூறி அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெற்றுள்ளது. பெருமளவு நிதிஉதவி மற்றும் ஆயுத உதவி பெற்று உள்ள பாகிஸ்தான் சொல்லும்படியான நடவடிக்கைகள் எதுவும் தீவிரவாதத்திற்கு எதிராக எடுத்ததாக தெரியவில்லை.

 

பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகள் நல்லவர்கள் என்றும் மற்றவர்கள் கெட்டவர்கள் என்றும் பேதம் காட்டிவருகிறது.

 

பாகிஸ்தானுக்கு நிதிஉதவி மற்றும் ஆயுதஉதவி செய்வதற்கு இந்தியா அதிருப்தியை தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானுக்கு உதவி செய்வதற்கு அமெரிக்க பாராளுமன்றத்திலும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அனைத்து தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு உள்ளது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் அனைத்திலும் பாகிஸ்தான் உளவு அமைப்பு முக்கிய பங்கு வகிப்பது பல்வேறு தாக்குதல் விசாரணையில் தெரியவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்கா வெளியிட்ட பாதுகாப்பு ஆவணத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் - ஹக்கானி நெட்வோர்க் தீவிரவாத அமைப்புக்கும் வலுவான தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி பேசுகையில்,

ஹக்கானி நெட்வோர்க், அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் உயர்மட்ட அதிகாரிகளிடம் தொடர்ச்சியாக தெளிவுபடுத்தி வருகிறோம்.

 

பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளிடம் பேதம் காட்டாமல் நடந்துக் கொள்வதாக கூறிவருகிறது

என்று கூறிஉள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறை முகாம் மீது தற்கொலை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் 7 அமெரிக்க உளவாளிகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியது ஹக்கானி நெட்வோர்க்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.