Show all

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ரூ.62 லட்சத்திற்கு இபேயில் விற்பனைக்கு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ரூ. 62 லட்சத்திற்கு இபேயில் விற்பனைக்குப் போடப்பட்டு உள்ளார்.

‘பயனற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்’

என்ற தலைப்பில் இபேயின் இங்கிலாந்து பக்கத்தில் விற்பனைக்கு போடப்பட்டு உள்ளார்.

 

இணையதள விற்பனையில் மோசடி மற்றும் அதிர்ச்சிகள் நடைபெறுவது அவ்வபோது இருந்து வருகிறது. இந்நிலையில் உலகிற்கே அதிர்ச்சி தரும் வகையில் இந்த விற்பனை சம்பவம் நடைபெற்று உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இப்போது விற்பனைக்கு வந்து உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான நவாஸ் செரீப்பின் விலை ரூ. 62 லட்சத்திற்கு என்பதுதான் இப்போது சமூக வலைதளத்தில் ‘ட்ரன்டு’ ஆகிஉள்ளது.

 

பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் செரீப் விற்பனைக்கு... இனி தேவையில்லை.

அவருக்கு சிறிது அன்பு தேவைப்படுகிறது.

எந்தஒரு பெட்டி அல்லது அறிவுறுத்தலும் கிடையாது. வாங்குபவர் பெற்றுக் கொள்ளவேண்டும்.

பொருளைத் தொட விற்பனை செய்பவர் தயாராக இல்லை. இன்று மத்திய லண்டனில் இருந்து பெற்று சென்றுவிடுங்கள்...  விற்பனை நிறைவு பெற்றதும் முகவரியானது கொடுக்கப்படும். பொருளை வாங்குபவர்கள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டை தாங்களே செய்துக் கொள்ளவேண்டும்

என்ற விளக்கத்துடன் பிரதமர் விற்பனைக்கு போடப்பட்டு உள்ளார்.

 

மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ள குறிப்பில்

செயல்படும் நிலையில் கிடையாது. இது செயல்படாது.

இது தவறு செய்துவிட்டது மற்றும் பிறப்பால் ஊழலாகும். முழுவதும் தயாரிக்கப்பட்டது, குடும்பம் மரபணு குறைபாடு உடையது மற்றும் ஊழலானது.

இதனை எடுத்து செல்லுங்கள் மற்றும் இந்த நோயை துடைத்தொழியுங்கள்..

இதனை வாங்கிக் கொண்டால் இதனுடன் சிறிய பொருளான ஷாக்பாஸ் செரீப் இலவசமாக கொடுக்கப்படும்

மற்றும் இந்த பொருட்கள் நன்றாக நாடகமாடும் மற்றும் உணர்ச்சிவசமாக பேசும் ஆனால் பயன் அளிக்காது. 

 

இது பாகிஸ்தானைவிட இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும்  துருக்கியிலே அதிகமாக காணப்படுகிறது. வணிகம் மற்றும் சொத்துக்கள் மற்றும் குடும்பம் பாகிஸ்தானில் உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் பிரதமர் ஆக இதுவரையில் விரும்புகின்றனர். தற்போது லண்டனில் உள்ள செரீப் முன்னாள் ஊழல் அதிபருடன் சொத்துக்களை எப்படி பாதுகாப்பது என்ற ஆலோசனையில் உள்ளது

என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்கள் ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியாகி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரும் இதில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.