Show all

ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புதுடெல்லியில் ஏர்-இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளை வெளியேற்றிய போது

5-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

ஏர்-இந்தியா விமானம் பறந்தபோது சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கையில், வாரணாசியில் இருந்து டெல்லி வந்த ஏர்-இந்தியா 405 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்று மாலை 7:15 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. விமானத்தில் ஹைட்ராலிக் குறைபாடு ஏற்பட்டதாக விமானி தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தின் சக்கரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு இருப்பினும் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றியபோது 5-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஹைட்ராலிக் குறைபாடு இருந்தது என்றும் விமானத்தில் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்றும் பலத்த சத்தம் மட்டுமே ஏற்பட்டது என்றும் விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்-இந்தியா வெளியிட்டு உள்ள அறிக்கையில், வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற விமானம் ஹைட்ராலிக் கசிவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக சக்கரப்பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. ஆனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. 146 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எந்தஒரு பயணியும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.