Show all

71அகவை பாட்டி 17அகவை சிறுவனைத் திருமணம் செய்து கொண்டார்

அமெரிக்காவில், பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற, 71அகவை பாட்டி, அங்கே சந்தித்த 17அகவை சிறுவனைத் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை சேர்ந்தவர், அல்மெடா எரெல், 71. இவரது, 45அகவை மகன், சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதற்கான இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றபோது, கேரி ஹார்ட்விக் என்ற 17அகவை சிறுவனைச் சந்தித்தார். கடந்த, 2013ல், தன் கணவர் டொனால்ட் இறந்தபின், தனிமரமாக வாழ்ந்து வந்த அல்மெடாவுக்கு, கேரியை, முதல் பார்வையிலேயே மிகவும் பிடித்து விட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் உறவுக்கு இருதரப்பு உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கடந்த ஆண்டு அக்டோபரில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அல்மெடாவை திருமணம் செய்ய, கேரியின், 48 அகவை தாயும், 71 வயது பாட்டியும் ஆசி வழங்கியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.