Show all

பாகிஸ்தான் குறித்த, வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை

வாஷிங்டனில் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

அணு விஞ்ஞானிகள் ஹான்ஸ் கிறிஸ்டென்சென், ராபர்ட் எஸ்.நாரீஸ் ஆகியோர் பாகிஸ்தானின் அணு ஆயுதக்குவிப்பு பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

அதில், கடந்த 20 ஆண்டுகளில் பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பார்க்கிறபோது, அந்த நாட்டின் தற்போதைய நிலவரம், எதிர்கால கணிப்பு எல்லாவற்றையும் ஆய்வு செய்கிறபோது,

2025-ம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் அதிகபட்சமாக 220 முதல் 250 அணுக்குண்டுகள் வரை குவிக்கலாம்.

அது நடந்துவிட்டால், உலகின் 5வது பெரிய அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் உருவெடுக்கும்.

2014-ம் ஆண்டின் பிற்பகுதியில், பாகிஸ்தானிடம் 3 ஆயிரத்து 100 கிலோ எடையுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம், 170 கிலோ ஆயுத தரம் கொண்ட புளுட்டோனியம் கையிருப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

இந்தப் பொருட்கள், 200 முதல் 300 அணுக்குண்டுகள் வரை தயாரிக்க போதும். அந்த நாட்டின் யுரேனியம் செறிவூட்டும் திறனையும்,

4 புளுட்டோனியம் உற்பத்தி அணு உலைகள் செயல்பாட்டில் இருப்பதையும் பார்க்கிறபோது, ஆண்டுக்கு 14 முதல் 27 அணுக்குண்டுகள் வரை தயாரிக்க முடியும்.

பாகிஸ்தான் தற்போது, அணுஏவுகணைகளைக் கொண்டுள்ளது. மேலும் 2அணு ஏவுகணைகளை அந்த நாடு தயாரித்துக் கொண்டிருக்கலாம். பாகிஸ்தான் தரையில் இருந்து ஏவக்கூடிய பாபர், ஹாட்ப்-7 ஏவுகணைகளையும்,

விண்ணில் இருந்து ஏவக்கூடிய ராட் அல்லது ஹாட்ப்-8 ஏவுகணைகளையும்கூட உற்பத்தி செய்து கொண்டிருக்கலாம். நீர்மூழ்கிக்கப்பல்களுக்காக பாகிஸ்தான் அணுக்குண்டுகளைச் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் 2020-ம் ஆண்டுக்குள் 60 முதல் 70 அணுக்குண்டுகள் வரை குவித்துவிடும் என அமெரிக்க பாதுகாப்பு உளவு அமைப்பு 1999-ம் ஆண்டு கணித்திருந்தது. ஆனால் 2006-2007 ஆண்டிலேயே அதை அந்த நாடு எட்டி விட்டது.

இனி வரும் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணு ஆயுதக்குவிப்பில் எவ்வளவு துரிதமாக ஈடுபடும் என்பதை இரண்டு அம்சங்கள் நிர்ணயிக்கும்.

ஒன்று, அந்தநாடு வைத்திருக்கும் அணுத்திறன் ஏவுகணைகள்,

மற்றொன்று இந்தியாவின் அணுஆயுத பெருக்கம். பாகிஸ்தானிடம் 2011-ம் ஆண்டு 90 முதல் 110 அணுக்குண்டுகள் வரை கைவசம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அந்த நாட்டிடம் 110 முதல் 130 அணுக்குண்டுகள் வரை இருக்கும் என மதிப்பிடுகிறோம். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நவாஸ் ஷெரீப் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகளின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.