Show all

எதிர்நடவடிக்கை கிடையாது! மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு: மலேசிய தலைமைஅமைச்சர்

மலேசியா பாமாயிலுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு எதிராக, இந்தியா மீது எங்களின் நடவடிக்கை எதுவும் இல்லை, என்கிறார் மலேசிய தலைமைஅமைச்சர். 

06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய பாஜக அரசு முன்னெடுத்த- விடுதலைக்குப் பிந்தைய இந்திய ஒருங்கிணைப்பின் போது காஷ்மீருக்கு உரிமையாக்கப்பட்டிருந்த சிறப்புத் தகுதியை இரத்து செய்ததையும், குடியுரிமை திருத்தச் சட்ட நடவடிக்கையும் மலேசிய தலைமைஅமைச்சர். 
மகாதிர் பின் முகமது விமர்சனம் செய்திருந்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பது நியாமல்ல என்று தெரிவித்திருந்தார். அவருடைய பேச்சை பாஜக அரசு தனக்கான  நெருக்கடியாகக் கருதியது. 

உலக அளவில் பாமாயில் உற்பத்தி செய்வதில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளது. இந்தோனேசியா இந்தியாவின் பாமாயில் இறக்குமதிகளில் மூன்றில் இரண்டு பங்கு தேவைகளை நிறைவு செய்து வந்தது. ஆனால், மலேசியாவின் குறைவான வரிகளால், இந்தோனேசியாவைவிட அதிக அளவிலான பாமயிலை இந்தியா மலேசியாவிடம் இறக்குமதி செய்தது.

இந்த நிலையில்- ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய தலைமைஅமைச்சர். பேசியிருந்ததையும் முன்னிட்டு, மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு இந்திய பாஜக அரசு அறிவுறுத்தியது. மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அது மலேசியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, பாமாயில் இறக்குமதியை இந்தியா தவிர்ப்பது மலேசியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய தலைமைஅமைச்சர் மகாதிர் பின் முகமது, ‘இந்தியாவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகள் எதையும் மலேசியா எடுக்காது. மலேசியா சிறிய நாடு. பதிலடி கொடுக்கும் அளவுக்கான நாடு கிடையாது’ என்று விளக்கமளித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.