Show all

சீன அதிபரும் மறுத்தார்! உலங்கு வானூர்தி பயணத்தைத் தவிர்க்கும் சீனத்தலைவர்கள்

சீனத்தலைவர்கள் பாதுகாப்பான காரையே பெரிதும் விரும்புகின்றனர். உலங்குவானூர்தியை முற்றாகத் தவிர்க்கின்றனர். சீன அதிபரும் அவர் சென்னையில் தங்கியிருந்த மின்மினி உணவகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு காரிலேயே பயணித்தார்.

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிலையில், தலைமைஅமைச்சர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, உலங்குவானூர்தியில் திருவிடந்தை சென்றார். அங்கிருந்து காரில், அவர் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கோவளத்தில் உள்ள தனியார் உணவகத்திற்கு  சென்றார்.

அங்கு, இரவு தங்கினார். அதே உணவகத்தில், சீன அதிபர் தங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், சீன அதிபர், அங்கு தங்குவதை, சீன பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பவில்லை. அதைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் உள்ள மினமினி உணவகத்தில், அவர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அங்கிருந்து உலங்குவானூர்தியில் திருவிடந்தை செல்ல, இந்திய தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது; அதையும், சீன அதிகாரிகள் ஏற்கவில்லை. சீனத் தலைவர்கள், உலங்குவானூர்தியில் பயணம் செய்வதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, காரில் அவர், மாமல்லபுரம் செல்ல முடிவானது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,303.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.