Show all

ஈடன் கார்டன்ஸ் மைதானம் 3 மாதங்களில் உலக தரத்திற்கு மாற்றப்படும் என்று உறுதி.

கடந்த 20ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருந்த ஜக்மோகன் டால்மியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் பதவியையும், மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியையும் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், சவுரவ்கங்குலி மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதனையடுத்து நேற்று அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஏற்று கொண்டார்.

அப்போது பேசிய அவர், நான் கடந்த 20 ஆண்டாக உலகின் பல நாடுகளுக்கு சென்று இருக்கிறேன். அங்குள்ள கிரிக்கெட் மைதானங்கள் எந்த மாதிரியான உலக தரத்திலான உள்கட்டமைப்புகள் இருக்கிறது என்பதை அறிவேன்.

அதேபோன்ற உலக தரத்திலான உள்கட்டமைப்புகளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் 3 மாதங்களில் மாற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன். ஜக்மோகன் டால்மியாவின் நிர்வாகத் திறமையைக் கூர்ந்து கவனித்து இருக்கிறேன். அவர் எனக்கு தந்தை மாதிரி என்று கூறியுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.