Show all

நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட உலகின் பெருநகரங்கள் பல கடலில் மூழ்கும் அபாயம்.

எதிர்காலத்தில் பெரு நகரங்களான ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், சீனாவின் ஷாங்காய், ஹம்பர்க், கல்கத்தா, நியூயார்க் ஆகியவற்றில் நாம் குடியிருக்க வேண்டும் எனில் வட அண்டார்டிக்காவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என ஆய்வாளரான ஆண்டர்ஸ் லீவர்மான் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரு நகரங்கள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவற்றில் குடியிருந்து வரும் 100 கோடி மக்களும் தங்களது குடியிருப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு, நிலக்கரி, எண்ணெய் என அனைத்தில் இருந்தும் வெளியாகும் கார்பனின் அளவு அதிகரித்து வருவதால் அது அண்டார்டிக் பகுதியின் பனிப்பாறைகளை மேலும் தாக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

அண்டார்டிக்காவின் வட பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள மாறுதல்கள் கால நிலை குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்த வைத்துள்ளது.

கட்டுப்பாடற்ற கரியமில வாயுக்களின் வெளியேற்றம், அண்டார்டிகா துவங்கி கடல் மட்டத்தை அதிகரிக்கச் செய்யும், அது அண்டார்டிக்காவின் மொத்த பனிப்பாறைகளையும் முற்றிலுமாக அழிக்கச் செய்யும்.

2020 வரையிலான ஒவ்வொரு பத்தாண்டுகளில் மட்டும் வட துருவத்தில் வெப்பநிலை 0.25 செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.