Show all

நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 4 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச உள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் இந்தப் பயணத்தில் அவருடன், அவரது மனைவி குல்சூம் நவாஸ், மகள் மர்யாம் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் முக்கிய அதிகாரிகள் பலரும் உடன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாகவும், அமைதியான பேச்சுவார்த்தை மூலம் எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் நீண்டநாட்களாக தடைபட்டு வரும் காஷ்மீர் மற்றும் எல்லைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையை சுமூகமாக மேற்கொள்வதற்கு பாகிஸ்தான் விரும்புவதாகவும், இந்தியா தரப்பில் அதற்கு ஒத்துழைப்பு வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.