Show all

தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் நாசா அனிமேஷன்

டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் அனிமேஷனை நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு மழை பெய்ததாக நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.

இது குறித்து நாசாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும்.

இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை என்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.