Show all

தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.

தன்னுடைய அடுத்தப் படத்தில் அமலா நடிப்பதை கமல் உறுதி செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்குப் பிறகு அமலாவுடன் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறேன். ஜரினா வஹாப்பும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு பெரிய நடிகையும் நடிக்க உள்ளார். இதுபற்றி பேசிவருகிறோம். படத்தை மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஜனவரியில் அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

இந்தப் படத்தை டி.கே. ராஜீவ் குமார் இயக்குகிறார். 1989ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் இணைகிறார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.