Show all

அரைகுறை ஆங்கிலத்திற்கு சொந்தக்காரரா! ஓடி ஓடி உலகஞ்சுற்றிய மோடியை, கிண்டலடித்திருக்கிறது அர்ஜெண்டினா பிரபல தொலைக்காட்சி

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனலான, குரோனிக்கா தொலைக்காட்சியில், 'சிம்ப்சன்ஸ்' என்ற பகடிஒவியத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. 'அபு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கதாபாத்திரத்தை மேற்கத்திய நாடுகளில் வாழும் சில இந்தியர்களுடன் தொடர்புப்படுத்தி இங்குள்ளவர்கள் கிண்டல் செய்வதுண்டு.

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடியின் விமானம் தரையிறங்கியதும் 'அபு' வந்து விட்டார் என்ற அடைமொழியுடன்  'குரோனிக்கா தொலைக்காட்சி' பளிச் செய்தி வெளியிட்டது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் குறிவைத்து அர்ஜென்டினா நாட்டின் பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்ட ஊடகத்துக்கு கண்டனமும் பாராட்டும் பெருகி வருகிறது. 

சொன்னா கேட்டுதா இந்தத் தம்பி, அழையாத விருந்தாளியா ஓடி ஓடி ஒலகம் சுத்துச்சுல்ல இந்தத் தம்பி, அசிங்கப் பட்டு இந்திய மானத்தையுமல்ல வாங்கிருச்சு. இந்தியத் தலைமை அமைச்சருக்குன்னு ஒரு கெத்து வேணாமா? என்று காலை நேரத்தில் தேநீர் கடைக்கு காத்தாட வந்த தமிழகப் பெரிசுகள் பேசிக்கொள்கின்றன 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.