Show all

மோடி? இந்தியப் பெண்கள் நலனில் அக்கறை செலுத்துங்கள்: சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர்

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மை காலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த கிழமையில்; காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார், அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 5 பேரால், சிறு பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், முறையான நியாயம் வழங்கக்கோரியும் பொதுமக்களே டெல்லியில் கடந்த கிழமை நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப்பேரணி நடத்தினார்கள். பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து மவுனம் கலைக்க மறுக்கும் தலைமை அமைச்சர் மோடி, அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேசுகையில், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்துக் கூட குறிப்பிடாமல், பொதுப்படையாகக் கண்டனம் தெரிவித்தார். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள், மகள்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டியன் லகார்டே குழந்தைகள், பெண்கள் பலாத்காரம் சம்பவம் குறித்து இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிகைக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் என்ன நடக்கிறது?, காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8வயது சிறுமி பலாத்காரம் செய்து, கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெண்கள் நலனுக்காக பெரும் புரட்சியை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி முதல் அனைத்து அதிகாரிகளும் பெண்கள், குழந்தைகள் நலனில் அதிக அக்கறை எடுத்துச் செயல்படுவார்கள் என நம்புகிறேன். இப்போதுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தலைமை அமைச்சர் மோடியைச் சந்தித்தேன். அங்குப் தலைமை அமைச்சர் மோடி நிகழ்த்திய பேச்சில், காலாச்சார பெருமை மிகுந்த இந்தியாவில் உள்ள பெண்கள் குறித்து அதிகமான விசயங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இது குறித்து தலைமை அமைச்சர் மோடியிடம் குறிப்பிட்டுப் பேசினேன்.

இப்போது நான் தெரிவிக்கும் இந்த வருத்தமும், அறிவுறுத்தலும் கூட சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைவராகக் கூறவில்லை. என்னுடைய உள்மன ஆதங்கத்தின் வெளிபாடாக பதிவு செய்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,763. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.