Show all

அதிக நேரம் பணி வாங்கும் நிறுவனங்கள் மீது புகார் வந்தால், தகுந்த நடவடிக்கை

அதிக நேரம் பணி வாங்கும் ஐடி நிறுவனங்கள் மீது புகார் வந்தால், அந்நிறுவனம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொழிலாளர்துறை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். மத்திய தொழிலாளர் நல அதிகாரிகள், மாநில தொழிலாளர் நல அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை எம்ஆர்.சி நகரில் நடைபெற்றது. தொழிலாளர் ஆணையர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொழிலாளர்கள் நலன்கள் குறித்தும், தொழிலாளர் நல சட்டங்களை முறையாக அமல்படுத்துவதும் குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக வேலைவாய்ப்பு, ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம், இருப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பேசிய தொழிலாளர்துறை தலைமை ஆணையர் ஏ.கே நாயக், மாயமான தொழிலாளர்களுக்கான வைப்பு நிதி மற்றும் உரிமை கோராத வைப்புநிதிகளை பிற செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது என்றும், தொழிலாளர் குடும்பத்தினர் அதனை உரிய முறையில் கேட்கும் போது அவை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் அதிக நேரம் பணி வாங்கும் ஐடி நிறுவனங்கள் மீது புகார் வந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாயக் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.