Show all

மேக்சிகோவில் ஒரு தமிழ் மாணவி சாதனை.

மெக்சிகோ நாடு, உலக அளவில் பள்ளிக்கூட மாணவர்களின் புதுமையான திட்டங்களை வரவேற்று ஆண்டு தோறும் கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மெக்சிகோ மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்றன. இந்திய அளவில் ஒரு மாணவி இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

அந்த மாணவியின் பெயர் மேக வர்ஷினி. இவர் கரூர் மாவட்டம் ஆச்சிமங்களம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவர் படிக்கும் பள்ளியின் சுவர் இடிந்து காணப்பட்டது. அதனால் அவர் காலி பிளாஸ்டிக் பாட்டிலை செங்கலுக்கு பதிலாக பயன்படுத்தி அதை சுவராக கட்டலாம் என்ற திட்டத்தை வடிவமைத்தார். இது அனைவராலும் பாராட்டப்பட்டது. அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி மேகவர்ஷினி பல்வேறு தேர்வுகளுக்கு பின்னர் இந்திய அளவில் தேர்ந்து எடுக்கப்பட்டார். இவரது பெற்றோர் மங்கேஷ்கர்- அருள் புஷ்பம். மாணவி மேகவர்ஷினியை அவரது பள்ளிக்கூட ஆசிரியர் சசிரேகாவும், ஒருங்கிணைப்பாளர் சித்ராவும் மெக்சிகோ நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். அனைத்து நாடுகளும் மாணவி மேக வர்ஷினியை பாராட்டிய நிலையில் அவர் நேற்று சென்னை வந்து சேர்ந்தார். அவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா ஆகியோர் பாராட்டினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.