Show all

முழுமையாக குணமடைந்தார் மைத்திரிபால சிறிசோனா! இலங்கை நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பை திரும்பப் பெற சிறிசேனா முடிவாம்

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தக் குளறுபடியும் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இலங்கை அரசியலை குளறு படிகளின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை தலைமைஅமைச்சராக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார் சிறிசேனா. இதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடுத்து இருந்தார். அதன்பின் அந்நாட்டு உச்ச அறங்கூற்றுமன்றம் நாடாளுமன்ற கலைப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. 

ஆனால் இலங்கையில் நாடாளுமன்றதத்தில் ரணில் விக்ரமசிங்கே முறையாக தலைமை அமைச்சராகப் பதவி ஏற்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது. இன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் அண்மையில் உள்ள நாடு குழப்பமில்லாமல் மக்களாட்சியை முன்னெடுக்க வாழ்த்துக்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.