Show all

இந்தியப் பாராளுமன்றத்தையும் கிண்டலடித்த மைத்திரிபால சிறிசேனா!

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகளை பற்றிக் கேட்டதற்கு, இலங்கையில் நடக்கும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணமான  அதிபர் மைத்திரிபால சிறிசேனா, 'நாடாளுமன்ற ரகளை என்பது பல நாடுகளிலும் நடக்கும் பொதுவான சங்கதிதான். இலங்கையில் மட்டும் இது நடப்பதில்லை. இந்தியாவில், ஜப்பானில், அமெரிக்காவில், ரஷ்யாவில் ஒருவரையொருவர் துரத்துவதெல்லாம் நடக்கிறது. சில நேரங்களில் கைகால்களை உடைத்துக்கொள்ளவும் செய்கின்றனர்' என்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையெல்லாம் கிண்டலடித்திருக்கிறார் மைத்திரி பாலசிறசேனா.

கொழும்புலிருந்து வெளியாகும் சிலோன் டுடே இதழுக்கு அளித்த பேட்டியிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அரசியல் குழப்பநிலை நீடித்துவரும்நிலையில், அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை மையமாகக் கொண்டே அரசியல் நடப்புகள் அரங்கேறி வருகின்றன. சமகால நிலவரம் குறித்து சிலோன் டுடே இதழில் நேற்று மைத்திரியின் விரிவான பேட்டி வெளியாகியுள்ளது.

மோடியை ஒருமையில் பேசிவிட்டார் என்று வைகோவை வம்புக்கு இழுக்கும் தமிழிசை, இதை கேள்விப் பட்டால் என்ன செய்யப் போகிறாரோ தெரிய வில்லை. இனி மைத்திரிபால சிறிசேனா கதை அதோ கதிதான். எச்.ராஜவுக்கு தெரிந்து விட்டால் ஐயயோ அதைவிட ஆபத்து. என்ன செய்யப் போகிறார் மைத்திரிபால சிறிசேனா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.