Show all

மைத்திரிபால சிறிசேனாவிற்கு விழுந்த அடித்த அடி! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது: அறங்கூற்றுமன்றம்

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று ரணில் விக்கிரம சிங்கே மீதான ஆதரவுத் தீர்மானம் நாடளுமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப் பட்டு வெற்றி பெற்ற நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சஅறங்கூற்றுமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தலைமை அமைச்சராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியா கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றுள்ளது. அதனால் அவரது அரசு செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. 

இந்த வழக்கை இன்று விசாரித்த 7 அறங்கூற்றுவர்கள் கொண்ட உச்சஅறங்கூற்றுமன்ற அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. முன்னரே கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லது என அறங்கூற்றுவர்கள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இலங்கை அரசியலில் அடுத்து நடக்கவுள்ள நடவடிக்கைகளை உலகமே எதிர்பார்த்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,000.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.