Show all

ஜான்சன் - ஜான்சன் பொருள்களைப் பயன்படுத்தியதால் கர்பப்பை புற்றுநோய்

அமெரிக்காவில் உள்ள மிசவுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜாக்குலின் பாக்ஸ் (வயது 62) இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் -ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஜான்சன் - ஜான்சன் நிறுவனத்தின் பொருள்களைப் பயன்படுத்தியதாலே அவருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக கூறிய அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜான்சன்-ஜான்சன் நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான முகப்பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க தவறிவிட்டது என தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தாருக்கு, 72 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு ரூ. 493.50 கோடி) நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டனர்.

 

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.