Show all

12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார். ஆஸ்திரேலிய.

சிரியாவில் இருந்து அகதிகளாக வரும் 12 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் அளிக்க தயார் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து தினமும் வெளியேறும் மக்கள் ஆஸ்திரியா, ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு செல்ல விரும்பிய போது அவர்களை அந்த நாடுகள் ஏற்கவில்லை.

இந்நிலையில் தான் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அகதிகள் சென்ற 2 படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 5 பச்சிளங்குழந்தைகள் பலியானதுடன், அய்லான் என்ற 3 வயது சிறுவனின் உடல் துருக்கியில் கரை ஒதுங்கியது.

அந்த சிறுவன் கரை ஒதுங்கிய புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தான், ஹங்கேரியில் தவித்துக்கொண்டிருந்த அகதிகளை ஏற்க ஆஸ்திரியாவும், ஜேர்மனியும் முன்வந்துள்ளன.

இந்நிலையில், இன்று பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்றுவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டில் மேலும் 12 ஆயிரம் சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க தயாராக உள்ளோம்.

அதுமட்டுமல்ல்லாது, சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து வெளியேறி இதர நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள சுமார் இரண்டரை லட்சம் அகதிகளின் நல்வாழ்வுக்கான நிதியாக 44 லட்சம் ஆஸ்திரேலிய டொலர்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் சுமார் எட்டரை லட்சம் அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக பயணித்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடி வரக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.