Show all

நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நீதிமன்ற நடுவர்களை நியமிக்கும் கொலிஜியம் முறை குறித்த வழக்கில் நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை அவசியம் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கொலிஜியம் முறையில நடுவர்கள் நியமனம் செய்வதை மேம்படுத்துவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்,

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கான நடுவர்களை நியமிப்பதில் உச்ச நீதிமன்றத் தலைமை நடுவரின் முடிவே இறுதியானது. இதில் 4 மூத்த நடுவர்கள் கலந்தாலோசனை செய்து கருத்து வேறுபாடின்றி; நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடுவர் நியமனத்தில் நடுவண், மாநில அரசுகளின் பங்கு என்பது மிகவும் அவசியமானது. நடுவராக நியமிக்கப்படுபவருக்கு குறைந்தபட்ச வயது தகுதியாக இருக்க வேண்டும்.  நடுவர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை என்பது மிகவும் முக்கியம்.

அதற்கான வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். இதில் வரும் மாறுபட்ட கருத்துக்கள் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். நீதிபதிகள் நியமன முறையில் நம்பிக்கைத் தன்மை அவசியம். நடுவர்கள் நியமனத்தின் போது மாநில,நடுவண் அரசுகளின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நடுவர்கள்; தேர்வு செய்யும் கொலிஜியம் கூட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.