Show all

செல்ல நாயைக் கேலி செய்து இணையத்தில் தகவல் 37 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு வாய்ப்பு

தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது.

அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். அதற்கு வகை செய்யும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் மன்னரின் செல்ல நாயை அவமதித்ததாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது பெயர் தனகோர்ன் சிரிபாய்பூன். தொழிலாளியான இவர் மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் செல்ல நாயை கேலி செய்து இணையத்தில் தகவல் வெளியிட்டு இருந்தார்.

எனவே, அவர் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் அவர் மீது சேத துரோக குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டால் தனகோரனுக்கு 37 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தாய்லாந்து வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.