Show all

சுப்பிரமணியசாமிக்கு எதிராக தொடர்ந்து இருந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கும் தடை

பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்து இருந்தது. சமூக வலைதளங்களில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவ தூறான  கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப் பட்டன.

இதை எதிர்த்து சுப்பிர மணியசாமி உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க இடைக் கால தடை  விதிக்கப் பட்டது. இதற்கிடையே தன் மீதான அவதூறு  வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி சுப்பிரமணியசாமி இடைக் கால மனு தாக்கல் செய்திருந்தார். இந்த  மனு  இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்  என்று தீபக்மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 2-தேதி தெரிவித்து இருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சுப்பிரமணியசாமிக்கு எதிராக தமிழக அரசு  தொடர்ந்து இருந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கும் தடை விதித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அவதூறு  வழக்கை தொடர வழிவகை செய்யும் சட்டப்பிரிவை நீக்க கோரியும் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.இதை ஏற்று இந்த தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து ஒன்றாக விசாரிக் கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.