Show all

இந்தியா-சவுதி இடையேயான உறவு, மரபணுவிலேயே உள்ளதாம்! உண்மையை வெளிக்கொணர்ந்த சவுதி இளவரசரும் மோடியும்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.  இதன் ஒரு பகுதியாக இந்தியா வந்தடைந்த அவரை டெல்லி விமான நிலையத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இதன்பின் குடிஅரசுத்தலைவர் மாளிகையில் சவுதி இளவரசர் சல்மானுக்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  அதன்பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இளவரசர் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய இளவரசர், இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே மிக பழமையான உறவுகள் உள்ளன.  இரு நாடுகளின் நன்மைக்காக இந்த உறவானது பராமரிக்கப்பட்டு மற்றும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதி செய்ய நாம் விரும்புகிறோம்.

இளவரசரின் வலதுபுறம் மோடியும் மற்றும் இடதுபுறம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் அமர்ந்திருந்தனர்.  இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது என இளவரசர் கூறிய நிலையில், உடனடியாக மோடியும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆம், ஆம் என ஆங்கிலத்தில் கூறினார்.

ஆம் ஆரியர்களுக்கும், அராபியர்களுக்கும் மூலம் ஒன்றுதான். அரபு, பாரசீகம், உருது, ஹிந்தி ஒன்றுக் கொன்று தொடர்புடைய மொழிகள்தாம். ஹிந்தியை உருது மொழியில் எழுதினால் உருது. உருது மொழியை வடமொழியில் எழுதினால் அது ஹிந்தி.

மொழியாலும், இனத்தாலும் அராபியரோடு மரபணு தொடர்புடையவர்கள்தாம் ஆரியர்கள். கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயம் என்கிற இந்தியா வந்து, தமிழர் இறையியலை உள்வாங்கி, அதற்கு மகத்துவத்தைக் கற்பித்து, இன அடிப்படையிலான ஹிந்தி மொழி, தமிழர் இறையியலை உள்வாங்கிய ஹிந்து மதம், ஒரு காலத்தில் ஹிந்து ராஷ்டிரம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த ஆரியர்கள்: 

எந்த காலத்தும் தங்களுக்கான மண்ணை உருவாக்கி கொள்ளாமல் நாடேடிகளாகவும் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்ந்து பழகி விட்ட ஆரியர்கள், தமிழர் நாவலந்தேய இந்தியாவை பாரதமாக்கி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்த போதும் தங்கள் அதிகாரம் குறையாமல் கோலோட்சி வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,070.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.